பெண்ணொருவரை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற சுவிஸ் பொலிசார்: பின்னர் தெரியவந்த உண்மை
சுவிஸ் மாகாணமொன்றில் பொலிசார் ஒரு பெண்ணைத் தாக்கி, பல மீற்றர் தூரத்திற்கு அவரை தரதரவென இழுத்துச் சென்றார்கள்.
பணம் பறித்த பொலிசார்
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்த நிலையில், இரவு நேரத்தில் வாகன சோதனையின்போது, கார் டீலர் ஒருவரைத் தடுத்து நிறுத்திய பொலிசார், அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு அவரை விட்டுள்ளார்கள்.

பின்னர் தெரியவந்த உண்மை
உண்மை என்னவென்றால், இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உண்மையான பொலிசாரே அல்ல. சிலர் போலியாக பொலிசார் போல வேடமிட்டு மக்களை ஏமாற்றி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
Seuzach என்னுமிடத்தில் ஒரு கார் டீலரும், Affoltern am Albis என்னுமிடத்தில் உக்ரைன் நாட்டவர்களான மூன்று கார் டீலர்களும் இந்த போலி பொலிசாரிடம் தங்கள் பணத்தை இழந்துள்ளார்கள்.
தற்போது, சூரிக் மாகாண பொலிசார், இந்த மோசடி தொடர்பில், 35 மற்றும் 42 வயதுடைய இரண்டு பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |