உதயநிதி தலைக்கு விலை வைப்பவர் போலி சாமியார் தான்: அண்ணாமலை
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைப்பவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விதித்த சாமியார்
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரது தலைக்கு ரூ.10 கோடி என சாமியார் ஒருவர் விலை நிர்ணயம் செய்தார்.
அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியானது.
இதற்கு உதயநிதி, என் தலைக்கு எதுக்கு ரூ.10, தலையை சீவுவதற்கு ரூ.10 சீப்பு போதும் என கிண்டலாக பதில் அளித்திருந்தார்.
போலி சாமியார் - அண்ணாமலை
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சரின் தலைக்கு பரிசுத்தொகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "ஒருவரின் தலைக்கு விலை வைப்பது தவறு. அப்படியென்றால், அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று தான் அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன்.
ஆனால், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் போலி சாமியாராகத்தான் இருக்க முடியும். இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், ஏற்புடையது அல்ல" என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |