இந்தியாவில் புழங்கும் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவுஸ்திரேலியா சுகாதாரத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
போலி தடுப்பூசிகள்
இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் அபய்ராய்(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் அபய்ராய் தடுப்பூசியின் போலியான தடுப்பூசி தொகுப்புகள் புழக்கத்தில் இருந்து வருவதாக அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் இந்த போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பாதிப்புகள்
இந்த போலியான தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு வெறிநாய் கடியில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம் என்றும், அதனால் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட வெறி நாய்க்கடிக்கான மாற்றுத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |