'சந்திரயான்-3 லேண்டரை வடிவமைத்தேன்' என்று கூறிய போலி விஞ்ஞானி கைது!
சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டரை நான் தான் வடிவமைத்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.
போலி விஞ்ஞானி கைது
இந்நிலையில் இந்திய மாநிலம் குஜராத்தில், சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானியை போல ஒருவர் ஊடங்கங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் மீது, புகாரும் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், மிதுல் திரிவேதி என்பவரை கைது செய்தனர். அப்போது தான், இஸ்ரோவின் பண்டைய அறிவியல் பயன்பாட்டுத்துறையின் உதவித் தலைவராக ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதும், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் திகதியிடப்பட்ட போலிக் கடிதம் ஒன்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், இவருக்கும் சந்திரயான் 3 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இஸ்ரோ ஊழியர் என்று தன்னைக் கூறியதும் பொய் தான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இஸ்ரோவின் அடுத்த பாரத சக்தி என்ற திட்டத்திற்கான விண்வெளி ஆராய்ச்சி உறுப்பினர் என்று வைத்திருந்த போலி கடிதத்தையும் பொலிசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |