நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி.., ஒன்றரை ஆண்டுகளாக அரசை ஏமாற்றி ரூ.75 கோடி வசூல்
தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் ரூ.75 கோடி வசூல் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
போலி சுங்கச்சாவடி
இந்திய மாநிலமான குஜராத்தில் மோா்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இது, பாமான்போா்-கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சாலையை ஒட்டி இருந்த ஒயிட் ஹவுஸ் டைல்ஸ் என்ற தொழிற்சாலை மூடப்பட்டது. அதனால், நிறுவனத்தின் சொந்த நிலத்தில் அதன் உரிமையாளர்கள் புதிதாக ஒரு சாலையை அமைத்து போலி சுங்கச்சாவடி ஒன்றை நடத்தி வருகின்றனர்.
ரூ.75 கோடி வசூல்
இந்த சட்டவிரோதமான சுங்கச்சாவடியில் கட்டணம் குறைவாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தனியாா் சாலையைப் பயன்படுத்தி இந்த வழியாக சென்றன.
கார்களுக்கு ரூ.20 முதல் 200, கனரக வாகனங்களுக்கு ரூ.110 முதல் 595 வரையும் வசூல் செய்துள்ளனர். அதன்படி, சுமார் ஒன்றைரை வருடத்தில் ரூ.75 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், நிறுவனத்தின் உரிமையாளா்கள் அமா்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹா்விஜய் சிங் ஜாலா உள்ளிட்ட 5 போ் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த மோசடி தொடர்பாக நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளூர் பொலிஸாருக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால் ஒன்றரை ஆண்டுகளாக சுங்கச்சாவடியை சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |