பிரித்தானியாவில் சட்டவிரோத தொழிற்சாலை: 2000 போலி எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்
பிரித்தானியாவில் போலியான எடை குறைப்பு மருந்துகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலி எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த தொழிற்சாலையில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு ஊசி மருந்துகளை பொலிஸார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்துகளான மௌஞ்சரோ (Mounjaro)-வில உள்ள டைர்ஸ்படைட்(tirzepatide) என்ற மூலப்பொருள் இருப்பதாக தெரிவித்து போலியான எடை குறைப்பு ஊசிகளை இந்த சட்டவிரோத தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வந்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா பொலிஸ் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினர் நடத்திய கூட்டு சோதனையில் உற்பத்தி விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டு தொழிற்சாலை கலைக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போலி எடை குறைப்பு ஊசிகளின் மதிப்பு சுமார் £250,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தொழிற்சாலையில் இருந்து மூல ரசாயனங்கள், உற்பத்தி உபகரணங்கள் மற்றும் £20,000 ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |