நெதர்லாந்தை புரட்டியெடுத்த வீரர்.. அபார சதம் விளாசல்
பக்ஹர் ஜமான் 60 ஒருநாள் போட்டிகளில் 2599 ஓட்டங்கள் குவித்துள்ளார்
பாபர் அசாம் 90 ஒருநாள் போட்டிகளில், 59.42 சராசரியுடன் 4516 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
பாகிஸ்தான் அணி வீரர் பக்ஹர் ஜமான் நெதர்லாந்து அணிக்கு எதிராக அபார சதம் விளாசினார்.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ரொட்டர்டாமில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
A fine knock from Fakhar Zaman comes to an end!
— Cricket Pakistan (@cricketpakcompk) August 16, 2022
His innings was powered by 12 fours and a six#NEDvPAK pic.twitter.com/xF1X3CAQiy
அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தொடக்க வீரர் பக்ஹர் ஜமான், சர்வதேச ஒருநாள் போட்டியில் 7வது சதத்தை பதிவு செய்தார்.
அவர் 109 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 20வது அரைசதம் ஆகும்.
ODI century No.7️⃣ for @FakharZamanLive ?
— Pakistan Cricket (@TheRealPCB) August 16, 2022
The southpaw marches on ?#NEDvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/yIL2paiJ5L