பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்த கூத்து - கேட்ச் பிடிக்காமல் மிஸ் பண்ண சீனியர் வீரர்கள்
பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் எளிதாக வந்த கேட்சை தவற விட்ட சீனியர் வீரர்கள் அதன் பிறகு சொன்ன காரணம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கிய பாகிஸ்தான் பிரிமீயர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெஷாவர் ஷால்மி அணியும், லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதிய போட்டியில் பெஷாவர் அணி முதலில் பேட் செய்தது. அப்போது அந்த அணி வீரர் ஹைதர் அலி மிகப்பெரிய ஷாட் ஒன்றை அடிக்க முயன்றார்.
அது சரியாக பேட்டில் படாமல் கேட்ச் ஆக மாறியது. பந்தை பிடிக்க பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்களான முகமது ஹபீஸ் மற்றும் பகர் சமான் ஆகியோர் ஒரே சமயத்தில் முயன்றனர். இருவரில் ஒருவர் கேட்ச் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருமே சிறிதாக மோதிக் கொண்டு, கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாக கேட்ச் பிடிக்காமல் விட்டதைப் பற்றி போட்டிக்குப் பிறகு பேசிய முகமது ஹபீஸ், 'முதலில் சமான் என்னுடைய கேட்ச் என தெரிவித்தார். ஆனால், நானோ இல்லை. இது என்னுடைய கேட்ச் தான் என கூறினேன் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பகர் சமான் உங்களுடைய கேட்ச் என்று தானே நீங்கள் கூறினீர்கள். ஆனால், அது என்னுடைய கேட்ச் என என் மனதுக்குள்ளே நான் கூறிக் கொண்டேன் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
மேலும் கேட்ச் தவற விடும் இந்த புகைப்படத்தை, தன்னுடைய ட்விட்டரின் ஃப்ரோபைல் பிக்சர் ஆகவும் பகர் சமான் மாற்றி வைத்துள்ளார்.