பிரித்தானியாவில் புதிய கொரோனா விதி... 10,000 பவுண்டுகள் Fine விதிக்கப்படலாம்
பிரித்தானியாவில் தடுப்பூசி தரவுகளில் மோசடி அல்லது கொரோனா பரிசோதனையில் மோசடி செய்யப்பட்டது உறுதியானால், அந்த இடத்திலேயே 10,000 பவுண்டுகள் Fine விதிக்கப்படும் என புதிய விதியால் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஓமிக்ரான் அலை தொடர்பில் எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்களிக்கப்படவுள்ள ‘கொரோனா நுழைவுச்சீட்டு’ தொடர்பான விரிவான விதிகளை அரசாங்கம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விதியானது உள் அரங்கில் 500 பேர்கள் ஒன்று கூடுவதற்கும் வெளி அரங்கில் 4,000 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கும் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் என்றே தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை பகல் 6 மணியில் இருந்து கொரோனா நுழைவுச்சீட்டு நடைமுறை அமுலுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. அதாவது, இரு டோஸ் தடுப்பூசி முடித்துக் கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மொபைலில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள NHS செயலி, அல்லது மின் அஞ்சல், குறுந்தகவல் ஆகிய ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் மோசடி செய்யப்பட்டது உறுதியானால், உடனடியாக 10,000 பவுண்டுகள் Fine விதிக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறித்த கொரோனா புதிய விதியானது நாடாளுமன்றத்தில் வெற்றிபெறும் என்றே தெரியவந்துள்ளது.
உரிய சோதனைகள் அல்லது கொரோனா விதிகளை பின்பற்றாத தொழில் நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை பாயும். முதல் முறை விதிகளை மீறும் தொழில் கூடங்களுக்கு 1000 பவுண்டுகள் Fine விதிக்கப்படும்.
ஆனால் முதல் 14 நாட்களுக்குள் பிழை செலுத்த முன்வந்தால், 500 பவுண்டுகளாக குறைக்கப்படும். இரண்டாவது முறையும் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் 2,000 பவுண்டுகள் Fine விதிக்கப்படும். நான்காவது முறையும் கண்டுபிடிக்கப்பட்டால் 10,000 பவுண்டுகள் Fine விதிக்கப்படும் என்றே தொழில் கூடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய விதிகளானது ஜனவரி 26ம் திகதி வரையில் அமுலில் இருக்கும். வாடிக்கையாளர்களில் மேற்கொள்ளப்படும் சோதனை தொடர்பிலான தரவுகளை 3 மாதங்கள் வரையில் தொழில் கூடங்கள் பாதுகாக்க வேண்டும்.
குறித்த புதிய விதிகளானது, இரவு விடுதிகள், நடன அரங்கம், இசை விழாக்கள், திரையரங்கம், இசையரங்கம் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.