பள்ளியில் துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்துள்ளதாக சுவிஸ் பொலிசாருக்கு வந்த தகவலால் பரபரப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் யாரோ ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளது தொடர்பில் பொலிசாருக்கு தானியங்கி எச்சரிக்கை வந்துள்ளது.
தெரியவந்த உண்மை
1999ஆம் ஆண்டு, கொலராடோவிலுள்ள பள்ளி ஒன்றில் 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று.
அதைத் தொடர்ந்து, சுவிஸ் பள்ளிகளில் அதேபோல ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாராவது பள்ளிகளுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கும் தானியங்கி அமைப்பும், அதற்காகவே சிறப்பு பொலிசார் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த தானியங்கி அமைப்பிலிருந்துதான் நேற்று சுவிஸ் பொலிசாருக்கு எச்சரிக்கை சென்றுள்ளது.
உடனடியாக ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைய, அந்தப் பள்ளியில் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்தே அந்த தானியங்கி அலாரம் பொலிசாரை எச்சரித்துள்ளது தெரியவந்தது.
மின்தடையால் இப்படி தவறான எச்சரிக்கை வருவதை சரி செய்யும் முயற்சியில் துறைசார் நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |