அவர் செய்யும் தொழில் அவமானம் என கருதிய குடும்பம்... ரூ 1350 கோடிக்கு சொந்தமாக்கிய முகேஷ் அம்பானி
உள்ளாடைகள் குறித்து விவாதிப்பதே அருவருப்பாக கருதப்பட்டுவந்த காலகட்டத்தில், பெண் ஒருவர் துணிச்சலாக உள்ளாடைகளுக்கான நிறுவனம் ஒன்றை தொடங்கி சவால்களை எதிர்கொண்டு சாதித்துள்ளார்.
இந்தியாவில் உள்ளாடை
இந்தியாவின் ஜார்கண்ட் மாகாணத்தில் பிறந்த ரிச்சா கர் என்பவரே அந்த சாதனைப் பெண். இவர் தொடங்கியதுதான், இந்தியா முழுக்க பெரும் ஆதரவைப் பெற்ற உள்ளாடைகளுக்கான Zivame நிறுவனம்.
தொழில்முனைவோராக மாறும் முன்னர் 2007ல் ரிச்சா கர் முதுகலைப் பட்டயப் படிப்பைத் தொடர்ந்தார். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் துவங்கிய ரிச்சா கர், பின்னர் SAP சில்லறை விற்பனை ஆலோசனை மையம் மற்றும் Spencers ஆகிய நிறுவனங்கலிலும் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
NMIMSல் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, இந்தியாவில் உள்ளாடைகளுக்கான சில்லறை விற்பனை முறையை மாற்றுவதற்கான தனது பயணத்தைத் தொடங்கினார்.
2011ல் நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்கான உள்ளாடைகள் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய Zivame நிறுவனத்தை தொடங்கினார். மிக விரைவிலேயே Zivame நிறுவனம் பெண்களிடையே பெரும் வரவேற்பை அள்ளியது.
பலர் தங்களுக்கு விருப்பமான அளவிலும் நிறத்திலும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் பொருட்டு, சுமார் 5,000 வடிவங்களில் 100 அளவுகளில், 50 வகை தயாரிப்புகள் Zivame நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
படிப்படியாக பெண்களின் தேவை அறிந்து அவர்களுக்கான பிரத்யேக உடைகளை வடிவமைக்கவும் முடிவு செய்தனர். பாகுபாடில்லாத வாடிக்கையாளர் சேவையும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பும் அதன் நற்பெயரை வலுப்படுத்தியது.
160 மில்லியன் டொலர்
இணையமூடாக விற்பனை பெரும் வளர்ச்சியடைய, 2016ல் முக்கிய நகரங்களில் கடைகளை திறக்கவும் ரிச்சா கர் முடிவு செய்தார். 2017ல் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும் Zivame நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மட்டுமின்றி நிறுவனத்தில் தனக்கான பங்குகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். வெளியான தரவுகளின் அடிப்படையில் ரிச்சா கர் சொத்து மதிப்பு ரூ 749 கோடி என்றே தெரிய வருகிறது.
பெண்களிடையே பெருகிவரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு, 2020ல் முகேஷ் அம்பானி தமது ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனம் சார்பில் 160 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ 1350 கோடிகளுக்கு) தொகைக்கு Zivame நிறுவனத்தை சொந்தமாக்கியுள்ளார்.
ரிச்சா கர் செய்து வரும் தொழில் தங்களுக்கு அவமானமாக இருப்பதாக குடும்பத்தாரால் ஏளனம் செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் பல கோடிகளுக்கு உரிமையாளராக, தொழிலதிபராக வலம் வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |