விஷமாக மாறிய மீன்! அடுத்தடுத்து பீதியை கிளப்பும் கேரளா
திருவனந்தபுரத்தில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லாராவில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழையசந்தையில் (உள்ளூர் சந்தை) வாங்கிய மீன்களை உட்கொண்டதால் அவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதே பகுதியில் மீன் வாங்கி சாப்பிட்ட மற்றோருவரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மகளை வெட்டிக்கொன்ற தந்தை.. இரண்டாவது திருமணம் செய்ததால் வெறிச்செயல்!
இதனையடுத்து, பழையசந்தையில் பொலிஸார் சோதனை நடத்தினர். சுகாதார துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுகாதாரத்துறையிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
கடந்த வார இறுதியில் கேரளாவின் வடக்கே காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா சாப்பிட்டதால் 16 வயது சிறுமி இறந்தார் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரை கொல்லும் விஷமா ஷவர்மா? பிரபல மருத்துவரின் வைரலாகும் பதிவு