புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக சுவிட்சர்லாந்துக்கு இளம்பெண்களை அழைத்துவந்த நபர் மீது வன்புணர்வு குற்றச்சாட்டு
புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக வெளிநாடு ஒன்றிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு இளம்பெண்களை அழைத்துவந்த நபர் மீது வன்புணர்வு குற்றச்சாட்டு முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த நபரும், அவரது நான்கு மகன்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்கள்.
புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக சுவிட்சர்லாந்துக்கு இளம்பெண்களை அழைத்துவந்த நபர் மற்றும் வயதுவந்த அவரது நான்கு மகன்கள்மீது, துஷ்பிரயோகம், வன்புணர்வு முதலான ஏராளம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கை, 30 பக்க நீளம் கொண்டதாக உள்ளது.
அந்த தந்தை, தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து பதின்ம வயது இளம்பெண்களை அழைத்துவந்துள்ளார்.
ஆனால், கடந்த 16 ஆண்டுகளாக அவரும் அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
காலை முதல் இரவு வரை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்பட்ட அந்த பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியளிக்கப்படவே இல்லையாம்.
அந்தப் பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவர்களும், அவர்களுடைய 10 பிள்ளைகளும் தற்போது அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்த அந்த நபரும் அவரது நான்கு மகன்களும் Bern மாகாண நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.