பிரித்தானியாவில் யூடியூப் பார்த்து விமானம் தயாரித்த இந்திய குடும்பம்! வைரல் புகைப்படங்கள்
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய குடும்பம் ஒன்று லாக்டவுனில் விமானம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் Ashok Aliseril(38). இவரது மனைவி Abhilasha Dube(35). இவர்களுக்கு தாரா, தியா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த தம்பதியினர் ஊரடங்கு காலத்தில் யூடியூப் பார்த்து விமானம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பயனாக தற்போது முழு விமானம் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் வடிவமைத்த இந்த விமானத்தில் நான்கு பேர் வரை பயணம் செய்ய முடியும். அசோக் பொறியியலாளராக இருந்ததால் விமான வடிவமைப்பில் அவர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த விமானத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 1.57 கோடி ரூபாயாகும். இதற்கான பாகங்களை தென் ஆப்ரிக்காவில் இருந்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குடும்பம் தயாரித்த விமானத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.