மகளின் சடலத்தை பல வாரங்கள் பாதுகாத்த பெற்றோர்... பகீர் பின்னணி: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் வசித்துவந்த ஜப்பானிய குடும்பம் ஒன்று தங்களின் மகளின் சடலத்தை பல வாரங்கள் பாதுகாத்த சம்பவத்தின் பின்னணி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகள் இறக்கவில்லை
தங்கள் மகள் இறக்கவில்லை என்றே அந்த வயதான பெற்றோர் நம்பியிருந்ததாகவும், அதனாலையே அவர்கள் சடலத்தை பாதுகாத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த குடியிருப்பில் இருந்து மர்ம நாட்குறிப்பு ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள பதிவுகள் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Credit: PA
வடக்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 2018ல் சடலமாக மீட்கபட்டவர் பிரபல நாடகக் கலைஞரான Rina Yasutake என்பவரே. 2013ல் கடைசியாக மருத்துவரை நாடியுள்ள Rina Yasutake அதன் பின்னர், குடியிருப்பில் இருந்து வெளியே சென்றதே இல்லை என கூறுகின்றனர்.
மட்டுமின்றி, சுமார் 20 ஆண்டு காலம் அவர் தனிமையில் இருந்துள்ளார். தந்தையின் இறப்புக்கு பின்னர் உணவு உட்கொள்வதை நிறுத்திக் கொண்ட Rina Yasutake, படுக்கையறையில் இருந்து வெளியேறவும் இல்லை என கூறுகின்றனர்.
அவர் எழுதியுள்ள நாட்குறிப்பில், தாம் எதிர்கொண்ட உளவியல் சிக்கல்களையும் அனுபவங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். 49 வயதில் Rina Yasutake இறந்துள்ளார்.
ரினா யசுதாகேவின் அழுகிய சடலம்
சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூர் மருந்தகத்தில் இருந்து ஈவா வார்டு என்பவர் பொலிசாருக்கு அளித்த தகவலை அடுத்தே, ரினா யசுதாகேவின் அழுகிய சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஈவா வார்டு பணியாற்றும் மருந்தகத்தில் இருந்து தம்பதி ஒன்று பெரிய அளவில் பல போத்தல்கள் அறுவை சிகிச்சை ஸ்பிரிட் வாங்கிச் செல்வதாக அவர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
Credit: Glen Minikin
ரினா யசுதாகே இறக்கவில்லை என்றே வயதான தாயாரும், சகோதரியும் உறுதியாக நம்பி வந்துள்ளனர். உடற்கூராய்வில், காயங்களால் அவர் இறக்கவில்லை எனவும், நோய் அல்லது மருந்து காரணமாக இறப்பு ஏற்படவில்லை எனவும் உறுதியாகியுள்ளது.
ரினா யசுதாகே இறந்து ஆறு வாரங்கலுக்கு பின்னரே, பொலிசார் அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
கடைசி வரையில், அவர்களது குடும்பத்தினர் ரினா யசுதாகே இறக்கவில்லை என்றே நம்பியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.