மனைவி, தாயுடன் சேர்ந்து பலியான நபர்: காயங்களுடன் உயிர்தப்பிய மகன்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் (42) இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அவருடன் தாய் கீதா, மனைவி மீனா (40) மற்றும் மகன் ரோஹித் (11) ஆகியோரும் சென்றனர். பக்கத்துக்கு கிராமத்தை நோக்கி அவர்களது இருசக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தது.
அப்போது பின்னால் வேகமாக வந்த பேருந்து ஒன்று அவர்களின் வாகனம் மீது மோதியது. இதில் நான்கு பெரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிறுவன் ரோஹித் தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |