குடியிருப்பில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்! வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தி
இந்திய மாநிலம் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறந்து கிடந்ததாக நான்கு பேர்
கர்நாடகாவின் மைசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு இறந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15) என தெரிய வந்தது.
வாட்ஸ்அப் குறுந்தகவல்
மேலும், நேற்றிரவு அனைவரும் இறப்பதற்கு முன் தமது உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதனைப் பார்த்த பின்னரே உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதிக கடன் காரணமாக சேத்தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும், அவர் குடும்பத்தினருக்கு நஞ்சு கொடுத்துவிட்டு தூக்கிட்டு இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |