யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்... சுவரில் எழுதிவைத்துவிட்டு குடும்பம் எடுத்த முடிவு
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு குடும்பமே உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
குடும்பம் எடுத்த முடிவு?
உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுரா என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தவர்கள் மணிஷ் (35) என்னும் விவசாயி, அவரது மனைவியான சீமா மற்றும் தம்பதியரின் மூன்று பிள்ளைகள்.

நேற்று காலை, மணிஷுடைய வீடு வெகுநேரமாக திறக்காமலே இருந்ததைக் கவனித்த உறவினர் ஒருவர் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வீடு உள்பக்கமாக பூட்டியிருக்க, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த பொலிசார், அங்கு மணிஷ் குடும்பமே மொத்தமாக உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
வீட்டின் சுவரில், மணிஷாகிய நானும் என் மனைவி சீமாவும் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே எங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறோம், இந்த விடயம் தொடர்பில் பொலிசார் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
விடயம் என்னவென்றால், சீமாவின் தந்தையான விஜேந்திரா, முந்தின நாள்தான் தன் மகள் குடும்பத்தை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் சாதாரணமாகவே இருந்ததாகவும், இப்படி ஒரு விடயம் நடக்கும் என்ற சந்தேகம் எதுவும் தனக்கு எழவேயில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
ஆக, மணிஷ் குடும்பத்தினர் உண்மையாகவே தங்கள் முடிவை தாங்களே எடுத்துக்கொண்டனரா, அல்லது இது இந்த மரணங்களின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பதை அறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |