கொரோனாவால் தாமதமாகிக்கொண்டே சென்ற பிள்ளைகளின் திருமணம்... இந்திய பெற்றோர் எடுத்த முடிவு
கனடாவில் வாழும் தங்கள் பிள்ளைகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிக்கொண்டேபோக, பெற்றோர் எப்படியாவது அந்த திருமணத்தை நடத்தி அந்த காதல் ஜோடியை சேர்த்துவைப்பது என முடிவு செய்தார்கள். ஏழு ஆண்டுகளுக்குமுன் இந்தியாவின் Dombivli என்ற இடத்திலிருந்து கனடாவுக்கு உயர் கல்விக்காக சென்றார் Bhushan Chaudhari (30).
அங்கே அவர் கல்வியை முடித்து, ஒரு வேலையிலும் சேர்ந்து குடியுரிமையும் பெற்றுவிட்ட நிலையில், Mandeep Kaur (28)ஐ சந்தித்துள்ளார். தங்கள் காதல் குறித்து இருவரும் பெற்றோருக்குச் சொல்ல, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு குடும்பத்தினரும் சந்தித்துக்கொண்டார்கள்.
2020இல் திருமணத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இளம்ஜோடியால் Dombivliக்கு செல்ல இயலவில்லை. பெற்றோராலும் கனடாவுக்கு வர இயலவில்லை.
ஆக, இரண்டாண்டுகளாக திருமணம் தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், இனியும் பிள்ளைகளை பிரித்துவைப்பது நல்லது இல்லை என முடிவு செய்தனர் பெற்றோர். ஆகவே, ஒன்லைனிலேயே திருமணத்தை நடத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது.
பிள்ளைகளுக்கு வேண்டிய நகை, துணிமணிகள், திருமணத்திற்கான பொருட்கள் அனைத்தையும் கூரியரில் பெற்றோர் கனடாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். மணமகள் வீட்டார் அமிர்தசரஸிலிருந்து Dombivliக்கு வந்து சேர, ஒன்லைனிலேயே Bhushan, Mandeep Kaur திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
பெற்றோர் இந்தியாவிலிருந்தவண்ணம் பிள்ளைகளை வாழ்த்த, ஒன்லைனிலேயே மணமக்கள் ஆசி பெற்று திருமண வாழ்வை துவங்கியுள்ளார்கள்.