நிறுவனத்தை விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்
குடும்பம் ஓன்று தனது நிறுவனத்தை விற்று ஊழியர்களுக்கு சுமார் ரூ.2,000 கோடிக்கு வழங்கியுள்ளது.
ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டில் கிளாட் வாக்கர் என்பவர் மின்சாதங்களுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் ஃபைபர்பாண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தினார்.

பல்வேறு நெருக்கடியான சூழலிலும் நிறுவனம் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது.
இந்நிலையில், நிறுவனத்தின் CEO ஆக இருந்த கிளாட் வாக்கரின் மகன் கிரஹாம் வாக்கர் கடந்த ஆண்டில் நிறுவனத்தை 1.7 பில்லியன் டொலருக்கு ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.
ஆனால் விற்பனையின் போது, 15% நிறுவன ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இதன்படி, மொத்தமுள்ள 540 முழு நேர ஊழியர்களுக்கு 240 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,295 கோடி) வழங்கப்பட உள்ளது.
இதற்கு ஊழியர்கள் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு முழு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு ஊழியருக்கு சராசரியாக 4,43,000 டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.23 கோடி) வழங்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த லெசியா கீ, இந்த பணத்தின் மூலம், தனது வீட்டுக் கடனை அடைத்துவிட்டு ஒரு ஆடை விற்பனையகத்தைத் திறந்தார்.
67 வயதான ஹாங் பிளாக்வெல் ஓய்வு பெற்று, தனது கணவருக்கு ஒரு டொயோட்டா டகோமா காரை வாங்கிக் கொடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |