தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த ஒட்டுமொத்த குடும்பம்.., ரயில் மோதி அனைவரும் மரணம்
தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்ற ஒட்டு மொத்த குடும்பமும் ரயில் மோதி உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
ரயில் மோதி உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஷேக் தோலா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முகமது அகமது (26) மற்றும் நஜ்னீன் (24). இவர்களுக்கு 3 வயதில் அப்துல்லா என்ற மகன் இருந்தார்.
இவர்கள் மூவரும் நேற்று காலை அருகில் உள்ள உமாரியா கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, தாய் நஜ்னீன், தந்தை முகமது அகமது, மகன் அப்துல்லா ஆகிய மூன்று பேரும் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர்.
அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக பயணிகள் ரயில் வேகமாக வந்துள்ளது. அதனை கவனிக்காத மூன்று பேரும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரீல்ஸ் எடுக்க சென்ற போது ரயில் மோதி உயிரிழந்தனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
பின்னர், அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |