19ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை: 18 மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்

Canada
By Balamanuvelan Aug 19, 2026 11:06 AM GMT
Report

Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு. 

19ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை: 18 மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம் | Family Sue Building Owner Baby Fall From Apartment

அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்‌ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை

இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்‌ஷித், தீபாலி தம்பதியர். 

ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.

குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்

இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.

அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.  

கனடா மாகாணமொன்றில் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்

கனடா மாகாணமொன்றில் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்

அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.

இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US