மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கக் காத்திருக்கும் பெற்றோர்: ஜெனீவாவில் நிலவும் அச்சம்
ஜெனீவாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, அவரது குடும்பத்தினர் காத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அச்சம் உருவாகியுள்ளது.
வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் குடும்பங்கள்
கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள Thônex என்னுமிடத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, அந்தப் பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குள் அடைந்துகிடக்கிறார்களாம்.
DayFR Euro
கொலை செய்தவரின் குடும்பத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு
இதற்கிடையில், கடந்த சில நாட்களில் அந்த பகுதிக்கு பல முறை பொலிசார் அழைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் எந்த அளவுக்கு பதற்றம் நிலவுகிறது என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
worldradio
அத்துடன், கொலை செய்ததாகக் கூறப்படும் நபருடைய குடும்பத்தினருக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.