பிரபல அமெரிக்க பாடகி 43 வயதில் மரணம்!
அமெரிக்காவில் பிரபல பாடகியான ஐரிஷ் கிரின்ஸ்டெட் தனது 43வது வயதில் உயிரிழந்துள்ளார்.
பிரபல இசைக்குழு
702 இசைக்குழுவைச் சேர்ந்த பாடகி ஐரிஷ் கிரின்ஸ்டெட்(43). அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இவர் மரணமடைந்துள்ளார்.
Getty Images
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரிஷின் சகோதரி லேமிஷா மரணத்தை உறுதி செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'என் அழகான சகோதரி மற்றும் தோழி இன்று மாலை காலமானார் என்பதை உங்களுக்கு தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு நீண்ட போராட்டத்தை அனுப்பித்த அவள் இறுதியாக நிம்மதியடைந்துவிட்டாள். அவள் வெளியில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் அழகாக இருந்தாள்' என எழுதியுள்ளார்.
இறப்பு காரணம்
ஐரிஷின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் கடுமையான மருத்துவ பிரச்சனைகள் காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்ததை கடந்த டிசம்பரில் ஐரிஷ் பதிவிட்டிருந்தார்.
கிரின்ஸ்டெட்சகோதரிகள் மற்றும் கமீலா வில்லியம்ஸ் ஆகியோரைக் கொண்ட குழு, அவர்களின் சொந்த ஊரான லாஸ் வேகாஸின் பகுதி குறியீட்டின் பெயரால் பெயரிடப்பட்டது. இவர்கள் 1996யில் தங்கள் ஆல்பமான 'No Doubt' மூலம் அறிமுகமானாரகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Bryan Steffy/WireImage
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |