பிரபல நடிகர் அர்ஜுனின் உறவினர் திடீர் மரணம்
பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் (89) உயிரிழந்துள்ளார்.
கடந்த 1960-ம் ஆண்டில் கன்னட திரையுலகில் நுழைந்தார் முனி சவுதப்பா. இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ராஜேஷ் என்று மாற்றிக்கொண்டார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தார் ராஜேஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஏராளமான கன்னடப் படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராஜேஷ் சில நாட்களாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து, இவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் ராஜேஷ் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கன்னட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவருடைய உடல், வித்யாரன்யாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜேஷ், நடிகர் அர்ஜுனின் உறவினராவார்.