ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த பிரபல நடிகர்: சொந்த நாடு திரும்பினார்
பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்துவந்த பிரபல நடிகரான டாம் குரூஸ், தன் சொந்த நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த நடிகர்
மிஷன் இம்பாசிபிள் என்னும் திரைப்படம் மிகப் பிரபலமான ஆங்கிலத் திரைப்படம் ஆகும். அந்த வரிசையில் மிஷன் இம்பாசிபிள் தொடங்கி ஏழு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன.
கடைசியாக Mission: Impossible Dead Reckoning Part II என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படங்கள் பிரித்தானியாவில் எடுக்கப்பட்டதால், அந்த படத்தின் கதாநாயகான டாம் குரூஸ் ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவிலேயே தங்கிவிட்டார்.
பிரித்தானியாவை தனது சொந்த வீடு போலவே கருதி வாழ்ந்துவந்த டாம் குரூஸுக்கு பிரித்தானியா மிகவும் பிடித்துபோய்விட்டது என்கிறார் படக்குழுவைச் சேர்ந்த ஒருவர்.
தனது திரைப்படப் பணிகள் முடிந்ததையடுத்து, தனது படக்குழுவினருக்கு விடை கொடுத்துவிட்டு, Battersea என்னுமிடத்திலிருந்து ஹெலிகொப்டர் ஒன்றில் ஏறி டாம் குரூஸ் அமெரிக்கா புறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
டாம் தனது மகனையும் நண்பர்களையும் காண்பதற்காக அமெரிக்கா புறப்பட்டுள்ளது உண்மை என்றாலும், அவர் அமெரிக்கா புறப்பட இன்னொரு காரணமும் உள்ளது.
சமீபத்தில் புயல் தாக்கிய ப்ளோரிடா மாகாணத்தில் டாமுக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று உள்ளது. புயலின்போது தனது வீடு குறித்து டாம் கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |