பிரான்சிலுள்ள ஒரு சொத்துக்காக நீதிமன்றம் சென்றுள்ள பிரபல நடிகையும் கணவரும்
பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலியும், அவரது கணவரான பிராட் பிட்டும் விவாகரத்து செய்து பிரிந்தது அனைவரும் அறிந்ததே.
பிரான்சிலுள்ள ஒரு சொத்துக்காக வழக்கு
இந்நிலையில், ஏஞ்சலினா பிராட் பிட் தம்பதியரின் விவாகரத்து வழக்கில் பிரான்சிலுள்ள ஒரு சொத்து முக்கிய இடம்பிடித்துள்ளது.
அது ஒரு ஒயின் தயாரிப்பகம். ஏஞ்சலினாவும் பிராட் பிட்டும் திருமணம் செய்துகொள்ளும் முன் The Château Miraval winery என்னும் அந்த ஒயின் தொழிற்சாலையை வாங்கினார்கள்.
ஏற்கனவே பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
பிராட் பிட்டிடம் அந்த ஒயின் தொழிற்சாலையின் 60 சதவிகித ஷேர்களும், ஏஞ்சலினாவிடம் 40 சதவிகித ஷேர்களும் இருந்தன. திருமணத்தின்போது, இன்னொரு 10 சதவிகித ஷேர்களை மனைவிக்கு பரிசாக அளித்தார் பிராட் பிட்.
ஆனால், 2016ஆம் ஆண்டு ஏஞ்சலினா விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.
இருவரும் சேர்ந்து வாங்கிய அந்த ஒயின் தொழிற்சாலையை தனியாக ஒருவர் விற்கக்கூடாது என்னும் ஒப்பந்தத்தை மீறி, தனது பங்குகளை ரஷ்ய மதுபான ஜாம்பவான் ஒருவருக்கு விற்றுவிட்டார் ஏஞ்சலினா.
தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. திருமணம் முறிந்து விவாகரத்தாகி ஏஞ்சலினாவும் பிராட் பிட்டும் பிரிந்த பிறகும் அவர்கள் விடாமல் போராடும் அந்த ஒயின் தொழிற்சாலையின் மதிப்பு, 500 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |