இளவரசர் ஹரியுடனான காதலை முறித்துக்கொண்ட பிரபல நடிகை: ஒரு வித்தியாசமான காரணம்
இளவரசர் ஹரி மேகன் மெர்க்கலை திருமணம் செய்யும் முன் பல பெண்களை காதலித்துள்ளார்.
அவர்களில் ஒரு பிரபல நடிகையும் உண்டு.
பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் மெர்க்கலை திருமணம் செய்யும் முன் பல பெண்களை காதலித்ததை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
பிரபல நடிகை ஒருவரையும் காதலித்திருக்கிறார் ஹரி.
அவருடைய பெயர், Cressida Bonas. கிரெசிடாவை ஹரிக்கு அறிமுகம் செய்தவர் இளவரசி யூஜீனி.
பலரும் தாங்கள் புகழ் பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். அதுவும், எப்படியாவது மக்கள் மனதில் இடம்பெறத் துடிக்கும் ஒரு நடிகையாக இருந்தும், கிரெசிடாவோ அந்த புகழுக்கு அஞ்சியே ஹரியைப் பிரிந்துள்ளார்.
Image: Getty
சில ஆண்டுகள் கிரெசிடாவும் ஹரியும் காதலித்த நிலையில், 2014ஆம் ஆண்டு நடந்த ஒரு விடயமே கிரெசிடா ஹரியைப் பிரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இளவரசர் வில்லியமும் அவருடைய மனைவி கேட்டும் 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருக்கிறார்கள்.
அப்போது எட்டு மாதக் குழந்தை ஜார்ஜையும் அழைத்துக்கொண்டு வில்லியம் கேட் தம்பதியர் பயணம் செய்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த கிரெசிடாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டதாம்.
image: Wireimages
தனக்கு ஒரு சிறு குழந்தை இருந்தால், தான் அந்தக் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கவிரும்புவேனே தவிர, அப்படி ஒரு சிறு குழந்தையையும் இழுத்துக்கொண்டு உலகம் சுற்ற விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாகவே ஹரியிடம் கூறிவிட்டு அவரைப் பிரிந்திருக்கிறார் கிரெசிடா.
இப்போதும் கிரெசிடாவும் ஹரியும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஹரி மேகன் திருமணத்திலும் கிரெசிடா பங்கேற்றிருந்தார்.
கிரெசிடாவுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. அவரது கணவர் பெயரும் ஹரிதான் ( Harry Wentworth-Stanley). தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது.