மனைவி மற்றும் பிள்ளைகள் அருகில் இருந்த போது உயிர் பிரிந்தது! கனடாவில் பிரபல இசையமைப்பாளர் மரணம்
கனடாவில் பிரபல இசைக்கலைஞர் கில்ஸ் குரிடி தனது 91வயது வயதில் காலமானார்.
கனடாவின் எட்முன்ஸ்டனை சேர்ந்த கில்ஸ் இசையமைப்பாளர், இசைக்கலைஞர் என வலம் வந்தவர் ஆவார்.
இவர் ஜாஸ் இசையில் ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மனைவி மற்றும் பிள்ளைகள் பக்கத்தில் இருந்த போது கில்ஸின் உயிர் பிரிந்ததாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அவர் மரணம் குறித்து எட்மன்ஸ்டன் முன்னாள் மேயர் சிரில் சிமர்ட் கூறுகையில், கில்ஸின் மரணம் சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
ஆனால் அவரது இசை நீண்ட காலமாக நம் காதுகளில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.