ஆசிய கோப்பைக்காக தீயில் இறங்கி பயிற்சி பெறும் பிரபல கிரிக்கெட் வீரர்!
ஆசிய கோப்பையை வெல்ல கிரிக்கெட் வீரர் ஒருவர் தீயில் இறங்கி பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை தொடர் கடந்த முறை டி20 முறையில் நடைபெற்றதை தொடர்ந்து இம்முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பு ஆசியக் கோப்பை நடைபெற உள்ளது.
எனவே, இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.ஆசிய கோப்பை போட்டி, இலங்கையில் நடைபெற உள்ளது.
வரும் 30-ம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் .பங்களாதேஷ் வீரர் மேற்கொள்ளும் பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Naim Sheikh working with a mind trainer ahead of Asia Cup. pic.twitter.com/mkykegJ06p
— Saif Ahmed ?? (@saifahmed75) August 18, 2023
23 வயதான இடது கை பேட்ஸ்மேன் முகமது நயிம் ஷேக் வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் அணியின் மனநல பயிற்சியாளர் உடன் சேர்ந்து, நெருப்பில் இறங்கி நடந்து பயிற்சி பெற்று வருகிறார்.
6 அடி தூர நெருப்பில் முகமது நயிம் ஷேக் நடந்து வரும் வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. இந்த பயிற்சி மனதை வலிமையாக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது.
முகமது நயிம் ஷேக் 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.
ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகளை பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் ஏற்கனவே அணி வீரர்களை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |