வயதில் மூத்த பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! தமிழ்ப்பெண்ணை மணந்த இந்திய வீரர் உட்பட
உலகளவில் பிரபலமாக உள்ள முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சச்சினை விட அஞ்சலி ஆறு வயது மூத்தவராவார். தம்பதிக்கு சாரா மற்றும் அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
ராஜ் குந்தரா - ஷில்பா ஷெட்டி
ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர் ராஜ்குந்தரா, நடிகை ஷில்பா ஷெட்டியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குந்தராவை விட ஷில்பா ஷெட்டி 3 மாதங்கள் மூத்தவராவார்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
விராட் கோலியை விட அவர் மனைவி அனுஷ்கா சர்மா 6 மாதங்கள் வயதில் மூத்தவர் ஆவார்.
சுரேஷ் ரெய்னா - பிரியங்கா
சுரேஷ் ரெய்னா - பிரியங்கா திருமணம் கடந்த 2015ல் நடைபெற்றது. ரெய்னாவை விட பிரியங்கா வயதில் ஐந்து மாதங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா - சஞ்சனா
தமிழ்ப்பெண்ணான சஞ்சனாவுக்கும், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பும்ரா, சஞ்சனாவை விட 2 வயது இளையவர் ஆவார்.