தமிழன் நடராஜனுக்கு இந்திய அணியில் இடமில்லையா? பிரபல வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள்

cricket natarajan indian cricket team T20 world cup
By Raju Aug 02, 2021 08:50 AM GMT
Report

முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிட்டீண்டர் சிங் சோதி எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ள நிலையில் அதில் தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிட்டீண்டர் சிங் சோதி, எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். சோதி தனது அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுலை எடுத்துள்ளார். மூன்றாவதாக ஷிகர் தவானையும் தனது அணியில் எடுத்துள்ளார்.

ஷிகர் தவான் இலங்கை தொடரில் பெரிதாக சோபிக்க விட்டாலும் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னர் என்பதை யாரும் மறந்துவிட கூடாது எனவும் சோதி தெரிவித்தார்.

மிடில் ஆர்டரில் விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ள சோதி, விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்துள்ள சோதி, தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு இடம் கொடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையிலும் நடராஜனை புறக்கணித்துள்ள சோதி புவனேஷ்வர் குமார், பும்ராஹ், தீபக் சாஹர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு தனது அணியில் இடம் கொடுத்துள்ளார்.

இதனிடையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜனை உங்கள் அணியில் ஏன் சேர்க்கவில்லை என ரசிகர்கள் பலரும் ரிட்டீண்டர் சிங் சோதியை நோக்கி சமூகவலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ரிட்டீண்டர் சிங் சோதி தேர்வு செய்துள்ள இந்திய அணி பின் வருமாறு.

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US