பிரெஞ்சு பழம்பெரும் நடிகை 92 வயதில் பாரிஸில் காலமானார்
பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி தனது 92வது வயதில் காலமானார்.
உலகளவில் பிரபலமான பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் அனோக் ஐமி (Anouk Aimee).
1932ஆம் ஆண்டில் பாரிஸில் பிறந்த இவர், 1947ஆம் ஆண்டு La Maison Sous la mer படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனோக், 2019யில் வெளியான The Best Years of a Life படத்தில் கடைசியாக தோன்றினார்.
அனோக் ஐமி சிறந்த நடிப்பிற்காக கோல்டன் குளோப், BAFTA மற்றும் அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அனோக் ஐமி தனது 92வது வயதில், பாரிஸ் நகரில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2012யில் நேர்காணல் ஒன்றில், ''நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை, நான் ஒரு நடனக் கலைஞராக விரும்பினேன்'' என அனோக் ஐமி கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |