உலக சாதனை படைத்த பென்குயின்; வைரலாகும் வீடியோ
ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக்காட்சிசாலையில் ஒரு பிரபலமான பென்குயின், உலகின் மிக உயர்ந்த விலங்காக உயர்த்தப்பட்டு கின்னஸ் உலக சாதனையும் பெற்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வைராலாகி வருகின்றது.
கின்னஸ் சாதனை படைத்த பென்குயின்,
எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் தளபதியாக பொறுப்பேற்கும் விழா வெகு விமரிசையாக கடந்த மாதத்தில் நடைபெற்றது.
அதில் சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது .இந்த பென்குயினுக்கு மிக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.
தளபதி பட்டம் சூட்டப்பட்டுள்ள பென்குயின் பறவை, இதற்கு முன்பாக ராணுவத்தில் பல பொறுப்புகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும், பதவி உயர்வு அளிக்கும் வகையிலும் தளபதி பட்டம் சூட்டப்பட்டது.
இதை கௌரவிக்கும் முகமாக கின்னஸ் உலக சாதனைப் பதிப்பாசிரியர் கிரெய்க் க்ளெண்டே செப்டம்பர் 29 அன்று எடின்பர்க் உயிரியல் பூங்காவிற்குச் சென்று, உயிரியல் பூங்காவின் பென்குயின் கீப்பர் குழுவிற்கு உலக சாதனைப் பட்டத்தை வழங்கியுள்ளார்.
இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations to Sir Nils Olav, the king penguin living at @EdinburghZoo, who has been promoted to Major General of the Norwegian King's Guard 👏
— #GWR2024 OUT NOW (@GWR) October 5, 2023
The promotion officially makes Sir Nils the highest ranking penguin.@rzss
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |