ரஷ்யாவின் அந்த ஒற்றை எழுத்து: சூரிச் காப்பீட்டு நிறுவனம் முக்கிய முடிவு
ரஷ்யாவின் போர் ஆதரவு சின்னமான Z எழுத்தை குழப்பம் ஏற்படுத்தக் கூடும் என கூறி சூரிச் காப்பீடு நிறுவனம் நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா, தங்களது இராணுவ வாகனங்கள், டாங்கிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என அனைத்திலும் Z என்ற எழுத்தை சின்னமாக பொறித்திருந்தது.
ஆனால், அந்த எழுத்து தற்போது பிரபல சூரிச் காப்பீடு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்களது சின்னத்தில் குறித்த எழுத்தை பொறித்துள்ள சூரிச் காப்பீடு நிறுவனம், ரஷ்ய படையெடுப்பை தாங்கள் ஆதரிப்பதாக மக்கள் கருதக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூரிச் காப்பீட்டு நிறுவனம், சமூக ஊடக பக்கங்களில் இருந்தும், முக்கிய விளம்பரங்களில் இருந்தும் Z எழுத்தை நீக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சூரிச் பிராண்ட் என்பது கடந்த 150 ஆண்டுகளாக உள்ளது. இது ஒரு நம்பகமான பிராண்ட் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சூரிச் காப்பீட்டு நிறுவனமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். மட்டுமின்றி 66 பில்லியன் டொலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.