பிரபல இயக்குனர் திடீர் மரணம்; முதல் படம் வெளியாகும் முன்னே உயிரிழந்த சோகம்
பிரபல மலையாள இயக்குனரான சேதுராஜன் கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.சேதுராஜன் (64). பல்வேறு மலையாளப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
முதன்முறையாக முற்றிலும் புதுமுகங்களை வைத்து 'என்டே பிரியதாமம்' என்ற படத்தை இயக்கினார்.
பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் பாதியிலேயே நின்ற நிலையில், ஒருவழியாக படம் எடுக்கப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கால் படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தது, எனினும் தற்போது படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர், சேதுராஜனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சேதுராஜன் உயிரிழந்திருப்பது அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.