ராஜ குடும்பத்தில் பிரபலமான நபருக்கு முடிசூட்டுவிழாவில் இடமில்லை: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாகிய சாரா ஃபெர்குசனுக்கு மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு இல்லை என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
2,000 விருந்தினர்களுக்கு அழைப்பு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு 2,000 விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
ஆனால், அந்த 2,000 பேரில், சாராவுக்கு அழைப்பு இல்லை. சாரா மன்னருடைய தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி ஆவார்.
Credit: Dan Charity
ஆனால், ஆண்ட்ரூவை திருமணம் செய்யும் முன்பே, சிறுவயதிலிருந்தே சார்லசுக்கு அவர் தோழியாவார்.
அத்துடன், கமீலாவுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர். ஆனாலும், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவில் சாராவுக்கு இடமளிக்கப்படவில்லை.
காரணம் என்ன?
சாரா மன்னருக்கு சிறுவயதிலிருந்தே நண்பர்தான் என்றாலும், இப்போது அவர் ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல. கணவருடன் வாழும்போதே, வேறொரு நபருடன் சாரா நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு சாரா ஆண்ட்ரூ தம்பதியருக்கு விவாகரத்தானது.
Credit: Getty
ஆக, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சாரா ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். இருந்தாலும், மறைந்த பிரித்தானிய மகாராணியாருக்கு சாராவை பிடிக்கும்.
ஆகவே, சாராவை அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன்னுடன் கொண்டாட அழைத்திருக்கிறார். அத்துடன், மகாராணியாரின் இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டது.
Credit: Getty - Contributor
ஆகவே, மகாராணியாரின் இறுதிச்சடங்கிற்கே அழைக்கப்பட்ட சாராவுக்கு மன்னருடைய முடிசூட்டுவிழாவில் இடம் இல்லையா என்ற குழப்பம் அரண்மனை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Credit: Reuters
ஆனால், சாரா ஆண்ட்ரூவைப் பிரிந்துவிட்டார். ஆக, அவர் ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல. அப்படியிருக்கும்போது, அவர் என்னதான் மன்னரின் சிறுவயது தோழியாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றிற்கு அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கமுடியாது இல்லையா, அது நியாயம்தானே என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்.
Credit: Getty