விஜய் டீவி சீரியல் நடிகைக்கு திருமணமாம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?
விஜய் டீவியின் பிரபல சீரியல் நடிகை யூடியூபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, அவர்களின் திருமணப்புகைப்படங்களும் வெளியாகி தற்போது வைலாரகி வருகின்றது.
பிரபல சீரியல் நடிகை திருமணம்
விஜய் டீவியில் ஒளிப்பரப்பட்ட சிவா மனசுல சக்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஜனனி பிரதீபிற்கே இவ்வாறு திருமணம் ஆகியுள்ளது.
தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து அவரையே கரம் பிடித்துள்ளார்.
அவ்வப்போது இருவரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, கடந்த மாதம் இருவரும் காதலிப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
அவர்களது திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வரைலாகி வருகின்றது.
மேலும் காதல் திருமணம் செய்துகொண்ட இனியன் மற்றும் ஜனனி பிரதீப் ஜோடிக்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |