நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி மரணம்
பிரபல திரைப்பட பாடகி கல்யாணி மேனன் உடல்நலக்குறைவால் தனது 80வது வயதில் காலமானார்.
காதலன் திரைப்படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ, ரஜினிகாந்த்தின் முத்து படத்தில் சூப்பர் ஹிட் அடித்த குலுவாலிலே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஓமணப் பெண்ணே. '96' படத்தில் அனைவரையும் காதலில் உருகவைத்த 'காதலே காதலே' உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளவர் கல்யாணி மேனன்.
இவர் இயக்குநர் ராஜீவ் மேனனின் தாய் ஆவார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாணி இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
நாளை பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.
கல்யாணியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.