பிரபல பாடகர் கொலை வழக்கு... பெயர் குழப்பத்தால் பிரச்சினையில் சிக்கிய நபர்
இந்தியாவை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட வழக்கில், பெயர் குழப்பம் காரணமாக சம்பந்தமில்லாத ஒருவரது பெயர் அடிபட்டு வருகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த சித்து மூஸ் வாலாவைக் கொன்றதற்கு கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டத்தைச் சேர்ந்த Goldy Brar என்று அழைக்கப்படும் சத்திந்தர் சிங் என்பவர் பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த கொலையுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவரின் புகைப்படம், அந்த வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
அதற்குக் காரணம், அவரது பெயரும் Goldy Brar என்பதுதான்!
ஆகவே, மூஸ் வாலா கொலையுடன் தொடர்புடைய Goldy Brar தான் இல்லை என சமூக ஊடகங்கள் வாயிலாக விளக்கமளித்துள்ளார் Jandwala என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான Goldy Brar என்பவர்.
Jandwala கிராமத்தைச் சேர்ந்தவரான Goldy Brar, பஞ்சாப் முதலமைச்சரான Bhagwant Mannஉடன் நிற்கும் புகைப்படம்தான் மூஸ் வாலா கொலையுடன் தொடர்புபடுத்தப்பட்டு தவறாக பரவிவருகிறது.
தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிவிக்கும் வகையில் வேண்டுமென்றே யாரோ இப்படி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள Jandwala கிராமத்தைச் சேர்ந்தவரான Goldy Brar, அந்த புகைப்படத்தைப் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.