பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகி மரணம்!
கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தார்.
தமிழில் மிஸ்டர் ரோமியோ, சிநேகிதியே, தலைநகரம், தலைமகன் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடியவர் சங்கீதா சஜித்(46). இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும், கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் இவருடன் இசை நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளனர்.
சிறுநீரகப் பிரச்சனையால் சங்கீதா சஜித் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அவர், தனது சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் சங்கீதா சஜித் இன்று மரணமடைந்தார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை அவருக்கு இறுதி சடங்கு நடக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சங்கீதா சஜித் மறைவு குறித்து அதிர்ச்சியடைந்த இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        