பிரபல தமிழ் சினிமா இயக்குநர் வி.சேகர் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
இயக்குநர் வி.சேகர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வி.சேகர், தொடக்கத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா ஒழிப்புப் பணியாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர், இயக்குநர் பாக்யராஜின் எங்க சின்ன ராசா திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர், 1990 நீங்களும் ஹீரோதன் என்ற படத்தை இயக்கியதன் மூலம், தமிழ் சினிமாத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து வரவு எட்டான செலவு பாத்தனா, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான பொறந்த வீட புகுந்த வீடா மற்றும் ராஜ் டிவியில் ஒளிபரப்பான வீட்டு வீடு ஆகிய தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
கடைசியாக 2014 ஆம் ஆண்டில் தனது மகன் கார்ல் மார்க்ஸை வைத்து சரவண பொய்கை என்ற படத்தை இயக்கினார்.
மேலும், பள்ளிக்கூடம், எங்க ராசி நல்ல ராசி ஆகிய 2 படங்களிலும் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவிற்கு தமிழ் சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |