பிரபல பிரித்தானிய நடிகை கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு
பிரபல பிரித்தானிய நடிகை ஒருவர், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நடிகை
பிரித்தானிய திரைப்படங்களில் நடித்தவரான விக்கி ரிச்சர்ட்ஸ் என்னும் (Viscella Richards, stage name Vikki Richards, 79) நடிகை, Trinidad தீவில் வாழ்ந்துவந்தார்.
இரட்டைக் குடியுரிமை கொண்டவரான விக்கி, 6 வயதில் தன் குடும்பத்துடன் பிரித்தானியா வந்துள்ளார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்களில் நடித்த விக்கி, ஓய்வுக்குப் பின் Trinidad தீவுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.
விக்கிக்கு திருமணம் ஆகவில்லை, அவர் தனியாகத்தான் வாழ்ந்துவந்துள்ளார்.
சடலமாகக் கண்டெடுப்பு
இந்நிலையில், புதன்கிழமையன்று, தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் விக்கி. கைகள் கட்டப்பட்ட நிலையில், அவர் தனது படுக்கையில் உயிரிழந்து கிடந்ததை அவரது தோழி ஒருவர் கண்டுள்ளார்.
வீடு திறந்திருக்க, விக்கி உடலில் எந்த காயங்கள்மின்றி உயிரிழந்துகிடந்துள்ளார். அதே நேரத்தில், அவரது வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் அலங்கோலமாக கிடந்துள்ளன.
ஆக, அவருக்குத் தெரிந்த யாரோதான் இதை செய்திருக்கவேண்டும் என பொலிசார் கருதுகிறார்கள். அத்துடன், விக்கியின் நகைகளும் மாயமாகியுள்ளதால், கொள்ளையடிப்பது அவர்கள் நோக்கமாக இருந்திருக்கலாம் என்றும் கருதும் பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |