இப்படியும் சாதனை செய்யலாமா.. ஒரு ரசிகரின் உலக சாதனை!
இளைஞர் ஒருவர் ஸ்பைடர்மேன் திரைப்படத்தை 292 முறை தொடர்ந்து பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி தீர்த்தனர். அமெரிக்காவில் ஸ்பைடர்மேன் வரிசை படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்நிலையில் புளோரிடாவைச் சேர்ந்த ராமிரோ அலனிஸ் என்ற தீவிர ரசிகர் ஒருவர், இந்த படத்தை தொடர்ந்து 292 முறை திரையரங்கில் பார்த்துள்ளார். இதன் மூலம் ஒரு படத்தை அதிக முறை திரையரங்கில் தொடர்ந்து பார்த்ததால் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்தது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ராமிரோ, ஒரே படத்தை 292 முறை பார்த்துள்ளேன், இது முடிவுக்கு வந்து விட்டது.. அனைவருக்கும் நன்றி என தெரித்துள்ளார்.
292 Cinema Productions attended of the same Film - @SpiderManMovie
— El Tigre Vengador (@agalanis17) March 15, 2022
My swing got to it’s end…??❤️?
Thank you all.@TomHolland1996 @SonyPictures @jnwtts @ComicBook @GabyMeza8 #SpiderMan #SpiderManNoWayHome @MarvelStudios #marvel @GWR #TigreVengador @Zendaya #MCU #GWR #movies pic.twitter.com/GdujHslShN
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தை ராமிரோ 191 முறை திரையரங்குகளில் பார்த்து சாதனை படைத்திருந்தார். ஆனால், ஃபிரெஞ்சு திரைப்படமான Kaamelott: First Installment-ஐ 204 முறை பார்த்து அர்னாட் க்ளீன் என்பவர் ராமிரோவின் சாதனையை முறியடித்தார். இப்போது அவரிடமிருந்து தனது சாதனையை ராமிரோ மீட்டெடுத்துள்ளார்.