மகா கும்பமேளா சங்கமத்தில் RCB ஜெர்சியை தண்ணீரில் நனைத்த ரசிகர்.., வைரலாகும் வீடியோ
மகா கும்பமேளா சங்கமத்தில் RCB ஜெர்சியை தண்ணீரில் ரசிகர் ஒருவர் நனைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த 13-ம் திகதி தொடங்கியது.
அந்தவகையில் இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த ஆண்டு மொத்தமாக 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், சில மனிதர்கள் வைரலாகி வருகின்றனர். அந்தவகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ரசிகர் ஒருவர் மகா கும்பமேளா நிகழ்வில் போது அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது.
அதாவது ரசிகர் ஒருவர் ஐபிஎல் அணியின் RCB ஜெர்சியை மூன்று முறை தண்ணீரில் நனைக்கிறார். RCB அணி பலமுறை இறுதிப் போட்டியை எட்டிய போதிலும், ஐபிஎல் கோப்பையைப் பெறவில்லை.
இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவில் "மகா கும்பமேளா, RCB என்றென்றும்" என்ற தலைப்பில் பதிவிட்டு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் RCB ஜெர்சியை நனைக்கிறதை காட்டுகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |