ஆடுகளத்தில் திடீரென நுழைந்து கோலியின் காலில் விழுந்த ரசிகர் - வைரல் வீடியோ
பெங்களூருவில் நடந்த போட்டியில் ரசிகர் ஒருவர் ஆடுகளத்தில் நுழைந்து, விராட் கோலியின் காலில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் 2024 தொடரின் நேற்றையப் போட்டியில், RCB அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
Virat Kohli masteclass in the first over. ⚡pic.twitter.com/Yb9lFiFvsp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
இப்போட்டியில் விராட் கோலி 77 ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டி20யில் 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்தார்.
முன்னதாக கோலி துடுப்பாட்டத்தில் இருந்தபோது ரசிகர் ஒருவர் அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்தார். கோலியை நோக்கி ஓடிவந்த அவர், காலில் விழுந்து பின் கட்டியணைக்க முயன்றார்.
உடனே மைதான ஊழியர்கள், காவலர்கள் வந்து அந்த ரசிகரை வெளியேற்றினர். இந்நிகழ்வு சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
A fan breached the field and touched Virat Kohli's feet.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
- King Kohli, an icon! ❤️pic.twitter.com/s82xq8sKhW
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |