அமெரிக்காவில் போட்டியின் போது பீர் குடித்த பெண்! வைரலான வீடியோவால் எழுந்த சர்ச்சை
டென்னிஸ் போட்டியில் ரசிகை பீர் குடித்த வீடியோவால் எழுந்த சர்ச்சை
அமெரிக்காவில் பெண் ரசிகை பீர் குடிப்பதை உற்சாகப்படுத்திய சக ரசிகர்கள்
டென்னிஸ் போட்டியின் போது ரசிகை ஒருவர் பீர் குடித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
செரீனா வில்லியம்ஸ் மற்றும் அஜ்லா டாம்லஜனோவிச் இடையேயான மூன்றாவது சுற்று மோதலில் மேகன் லக்கி என்ற இளம்பெண் செய்த விடயம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
தனது ஆண் நண்பர் வைத்திருந்த பீர் கிளாஸை வாங்கிய அவர், ஒரேயடியாக வேகமாக குடித்தார். அப்போது மற்ற ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். இந்த காட்சி மைதானத்தின் பிரதான திரையிலும் காட்டப்பட்டது.
It seems this is becoming tradition at this point ? pic.twitter.com/vTO1hUJVNS
— US Open Tennis (@usopen) September 4, 2022
மேலும், US Open தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, 'இந்த கட்டத்தில் இது ஒரு பாரம்பரியமாக மாறி வருகிறது' என பதிவிட்டது. ஏற்கனவே மேகன் லக்கி கடந்த ஆண்டு இதே போல் பீர் குடித்த வீடியோ வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் மேகன் லக்கியின் வீடியோவை ரசிகர்கள் பெரிதும் ரசித்தாலும், அளவுக்கு அதிகமாக மது அருந்துவதை போட்டியின் அமைப்பாளர்கள் ஊக்குவிப்பதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெண்ணொருவர் தனது பதிவில், 'நாம் ஏன் பெருமைகொள்ள வேண்டும்? அல்லது யாரோ ஒருவர் ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் சூடான பீரை உறிஞ்சுவதைக் கண்டு ஈர்க்கப்படுகிறோம்? இது பிங்கி குடிப்பழக்கம் என்று அழைக்கப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் நிகழ்கிறது. இது ஆரோக்கியமானதல்ல, சுவாரசியமாக இல்லை. மேலும் இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு இது ஒரு முன்மாதிரியான பொருள் அல்ல' என விமர்சித்துள்ளார்.