விராட் கோலியை காண ஓர் இரவுக்கு 23 ஆயிரம் செலவு செய்த ரசிகர்! வைரலாகும் புகைப்படம்
ரசிகருடன் கோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
கவுகாத்தியை சேர்ந்த ராகுல் பாய் பல ஆண்டுகளாக விராட் கோலியை காண வேண்டும் என்ற ஆவலில் இருந்துள்ளார்
விராட் கோலியை பார்ப்பதற்காக ரசிகர் ஒருவர் 23 ஆயிரம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்குள்ள ஹொட்டலில் தங்கியிருந்தனர்.
அதே ஹொட்டலில் விராட் கோலியின் தீவிர ரசிகரான ராகுல் ராயும் ஒரு இரவுக்கு அறையெடுத்து தங்கியுள்ளார். ஆனால் அந்த ஹொட்டலில் ஒரு இரவுக்கான வாடகை இந்திய மதிப்பில் 23 ஆயிரம் ரூபாய்.
விராட் கோலியை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த ராகுல் ராய் இவ்வாறு செய்துள்ளார். அவரது முயற்சிக்கு பலனாக காலை உணவுக்காக கோலி வந்தபோது ராகுல் ராய் அவரை நேரில் சந்தித்துள்ளார்.
ரசிகர் தனக்காக செய்த விடயத்தை அறிந்த கோலி, நெகிழ்ச்சி அடைந்து தன்னிடம் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அத்துடன் குறித்த ரசிகர் கொண்டு சென்ற புகைப்படத்திலும் கையொப்பமிட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.