திடீரென ஆடுகளத்தில் நுழைந்து காலில் விழுந்த ரசிகர்! அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா (வீடியோ)
இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்டில், ரசிகர் ஒருவர் ஆடுகளத்தில் நுழைந்து கேப்டன் ரோகித் சர்மாவின் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
முதல் டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 246 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
A fan met Rohit Sharma and touched his feet in Hyderabad.pic.twitter.com/25C07t2WaX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 25, 2024
அப்போது திடீரென ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் ஓடி வந்தார். அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் காலை தொட்டு கும்பிட்டு, அவரை கட்டிப்பிடிக்க முயன்றார்.
ரோகித் சர்மா அதிர்ச்சி
அதற்குள் அங்கு வந்த பாதுகாவலர் ஒருவர் குறித்த ரசிகரைப் பிடித்து அழைத்துச் சென்றார். ரசிகரின் இந்த செயலால் ரோகித் சர்மா சற்று அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
@Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |