ஐபிஎல் இறுதிப்போட்டியில் பொலிஸை அடித்து தாக்கிய பெண்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
CSK மற்றும் GT அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியின்போது பெண் ரசிகை ஒருவர், பொலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. மறுநாள் மீண்டும் ஆட்டம் நடக்கும் என பிசிசிஐ அறிவித்தது.
பொலிஸை தாக்கிய பெண் ரசிகை
இதற்கிடையில், மழை பொழிந்தபோது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 28, 2023
அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அப்பெண் தாக்கியுள்ளார். ஆனால் குறித்த அதிகாரி எதிர்வினை ஆற்றாமல் அங்கிருந்து நகர்ந்தார். எதற்காக அப்பெண் பொலிஸை தாக்கினார் என்பது குறித்த காரணம் வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் ரசிகர்களின் கூட்ட நெரிசலுக்கு இடையில் நடந்தது.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.